அதிர்ச்சி - இளைஞரின் நுரையீரலில் சிக்கிய ஆணிகள்.. தூங்கிய போது விழுங்கிய சம்பவம்.!!
nails found in youth stomach
இளைஞரின் நுரையீரல் மற்றும் வயிற்றில் இருந்து ஆணிகள் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிம்பிரி மருத்துவமனையில், உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் தவறுதலாக விழுந்த ஆணிகளை விழுங்கிவிட்டதாக கூறி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அதில், அந்த வாலிபரின் நுரையீரல் மற்றும் வயிறு பகுதியில் ஆணிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தனர். சுமார் 3 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டன.
மருத்துவர்களின் துரித செயலால் 19 வயது இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது. மருத்துவ குழுவினருக்கு இளைஞரின் பெற்றோர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
nails found in youth stomach