பூமிக்கு ஆபத்தா? நாளை மறுநாள் பூமியை கடக்கும் இரு சிறுகோள்கள்! நாசா வெளியிட்ட அறிவிப்பு!
NASA say Two asteroids pass by Earth dec 21
நாசா சமீபத்தில் இரண்டு மிகப்பெரிய சிறுகோள்கள் (ஆஸ்டிராய்டுகள்) வரும் 21 தேதி பூமியை அருகே கடந்து செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது.
இவ்விரண்டும் பூமியுடன் மோதினால் பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனினும், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அருகே செல்லும் என நாசா உறுதிபடுத்தியுள்ளது.
முதலாவது சிறுகோள், 2024 XQ4, சுமார் 50 அடி சுற்றளவிலானது, ஒரு வீடு அளவுக்கு சமமானது. இது மணிக்கு 47,634 கி.மீ வேகத்தில், இந்திய நேரம் டிச. 21 மாலை 3:03 மணிக்கு, சுமார் 1,06,000 கி.மீ தொலைவில் பூமியைக் கடந்து செல்லும்.
இரண்டாவது சிறுகோள், 2024 XN15, சற்றே பெரியது, சுமார் 60 அடி சுற்றளவிலானது. இது மணிக்கு 35,051 கி.மீ வேகத்தில், இந்திய நேரம் டிச. 21 மாலை 2:38 மணிக்கு, சுமார் 37,80,000 கி.மீ தொலைவில் பூமியைக் கடந்து செல்லும்.
நாசாவின் விலகிய பொருள் கட்டுப்பாட்டு விதிக்குள் இந்த சிறுகோள்கள் வந்தாலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் இதை கண்காணிக்க மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
NASA say Two asteroids pass by Earth dec 21