ஜாபர் சாதிக் ஜெய்பூரில் பிடிப்பட்டது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் வெளிநாடுகளுக்கு கடத்தும் முயன்றதாக 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் சிக்கியது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின்படி திமுக அயலக அணியின் நிர்வாகி ஜாபர் சாதிக்கிறகும் தொடர்பு இரப்பது உறுதி செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அவர் தலைமறைவானதால் அவரது வீட்டை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் இந்த வழக்கை கையாண்ட மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு துறை இயக்குனர் கைனேஷ்வர் சிங் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த வழக்கு குறித்து விரிவான விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ncb Deputy director press meet regards Jaffar Sadiq


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->