தலைவலி தொடங்கியது! முடியவே முடியாது! சந்திரபாபு, நிதிஷ்க்கு செக் வைக்கும் பாஜக!  - Seithipunal
Seithipunal


சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் அமைய உள்ள முத்தையா மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. 

இதில், மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை, ரயில்வே துறைகளை பாஜக தன்வசனமே வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெளியுறவுத்துறை, சட்டத்துறை, தகவல் தொடர்பு, பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கியத்துறைகளையும் பாஜக தன் வசமே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி, மத்திய அமைச்சரவையில் வேளாண் துறையை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். அப்படி தர முடியவில்லை என்றால் கூட்டுறவுத்தறையாவது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை பொறுத்தவரை, நிதி அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருப்பதால், பாஜக சற்று கலக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சபாநாயகர் பதவியையும் தங்கள் கட்சிக்கே வழங்க வேண்டுமென்று தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தி வருவதாகவும், இதனால் பாஜக கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜகவின் ஆட்சிக்கு மேலும் பக்கபலமாக இருக்கக்கூடிய நிதிஷ்குமார் துணைப் பிரதமர் மற்றும் 2 அமைச்சர் பதவிகள் கேட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி ஜனசக்திக்கு முக்கிய துறையுடன் கூடிய ஒரு அமைச்சர் பொறுப்பு வழங்குவதும் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NDA BJP Govt Chandrababu naidu Nitishkumar BJP Alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->