ஆந்திர பிரதேசம் : 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை - 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 10-ம் தேதி ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடா டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நல்லன் சக்ரவர்த்தி. இவர் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றிருந்தார். 

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய அவரது வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கொள்ளையடித்தனர். மறுநாள் காலை காலனியில் உள்ள  காவலாளி வீட்டின் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, வீட்டின் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதன் பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, போலீசார் அந்த பகுதியில் உள்ள சுமார் 150 சிசிடிவிகளில் இருந்த காட்சிகளை ஸ்கேன் செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில், ஈடுபட்ட கொள்ளையர்கள் நான்கு பேரை போலீசார் ஆந்திர பிரதேசம்-மராட்டிய எல்லையில் கைது செய்து, அவர்களிடமிருந்து 12.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். 

மேலும், இவர்கள் நான்கு பேரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையர்கள் என்றும் குடிவாடா டிஎஸ்பி சத்யானந்தம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andhira pradesh four peoples arrested for robbery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->