ஆந்திர பிரதேசம் : ரூ.30 லட்சத்தில் பெற்றோருக்கு கோவில் கட்டிய மகன்கள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தேகல்லு பகுதியை சேர்ந்தவர்கள் பூசாரி உருகுந்தப்ப சாமி-பண்டாரி சந்தனம்மா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பூசாரி உருகுந்தப்ப சாமி மும்பைக்குச் சென்று வியாபாரம் செய்து வந்ததன் மூலம் கிடைத்த பணத்தில் அவர் தனது சொந்த ஊரில் விவசாய நிலங்களை வாங்கியுள்ளார். 

இந்நிலையில், சாமியின் மனைவி பண்டாரி சந்தனம்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலை  அவரது மகன்கள் காட்டு பகுதியில் 25 சென்ட் இடத்தை வாங்கி அதில் தகனம் செய்தனர். 

அதன் பின்னர்  பூசாரி உருகுந்தப்ப சாமியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலையும் அவரது மகன்கள் தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே தகனம் செய்தனர். 

இதையடுத்து  பூசாரி உருகுந்தப்ப சாமியின் மகன்கள் பெற்றோர் மீது வைத்திருந்த அளவற்ற பாசத்தினால் அவர்களுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன் படி அவர்கள் பெற்றோர் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறையின் மீது ரூ.30 லட்சத்தில் கோவில் கட்டினர். 

அதுமட்டுமல்லாமல், பெற்றோர்களின் சிலைகளையும் வடிவமைத்து அதனை நேற்று முன்தினம் பூசாரி ரவி சாமி தலைமையில் கோவிலில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். 

இது தொடர்பாக அவரது மகன்கள் தெரிவித்ததாவது:- "மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஏற்ப எங்களுக்கு நல்ல பாதை அமைத்து, வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த பெற்றோரின் அடி சுவடுகளை பின்பற்றுவோம்" என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andira pradesh sons builded temple to parents


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->