காதலியை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய நண்பன்.! அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ். கண்ணூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வரும் இவர் காதலியை தனது செல்போனில் நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருந்தார்.   

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த முரளி கிருஷ்ணா அதனை தனது செல்போனுக்கு அனுப்பி கொண்டதையடுத்து தினேஷின் காதலிக்கு போன் செய்து தனது ஆசைக்கு இணங்க வேண்டும் மறுத்தால் நிர்வாண வீடியோக்களை உன்னுடைய உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதை கேட்டு பயந்த இளம்பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, இளம்பெண் சம்பவம் குறித்து தினேஷுக்கு தகவல் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ் நண்பரான முரளி கிருஷ்ணாவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார். 

இதையடுத்து, தினேஷ் கடந்த மாதம் 25-ந் தேதி நண்பர் கிரண்குமாருடன், முரளி கிருஷ்ணா வீட்டிற்கு சென்று மது அருந்தலாம் என்று கூறி இருசக்கர வாகனத்தில்  அழைத்துச் சென்றனர். அங்கு தினேஷ் நண்பர் கிரண்குமாருடன் சேர்ந்து முரளி கிருஷ்ணாவை கத்தியால் சரமாரியாக குத்தினர். 

இதில் முரளி கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் தினேஷ் மற்றும் அவரது நண்பர் முரளி கிருஷ்ணாவின் பிணத்தை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வரும் வழியில் நிர்வாணமாக வீசியுள்ளனர். 

இரவு அதிக நேரம் ஆகியும் வெளியே சென்ற மகன் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் போலீசில் கடந்த 16-ந் தேதி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் முரளி கிருஷ்ணாவை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தினேஷ் குமாரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முரளி கிருஷ்ணாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தினேஷ் மற்றும் அவரது நண்பர் கிரண்குமார் உள்ளிட்டோரை கைது செய்தனர். அதன் பின்னர், போலீசார் முரளி கிருஷ்ணாவின் உடலை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andira youth kill friend for threat girl friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->