பீகாரில் வாலிபர் கொலையால் காவல் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் சாலையோரம் அமர்ந்திருந்த வாலிபருடன் மர்மநபர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகராறு செய்துள்ளார். இந்த தகராறு சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. 

இதில் ஆத்திரமடைந்த மர்மநபர் வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக  போலீஸ் விசாரணையில் ஈடுபட்டு மர்ம நபரை தேடி வருகிறார்கள். 

இந்த நிலையில், நேற்று உயிரிழந்த வாலிபரின் உடல் அவரது சொந்த ஊரான பகவான்பூருக்கு எடுத்து வரப்பட்டது. வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாலிபர் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் கொலையாளியை கைது செய்யாததால் ஆவேசம் அடைந்துள்ளனர்.

இதனால், அந்த கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது வாலிபர்கள் சிலர் காவல் நிலையம் முன்பு இருந்த போலீஸ் வாகனங்களை உடைத்து, காவல் நிலையம் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near bihar peoples attack police station for youths died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->