செங்கல் சூளையில் வெளியான புகையால் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!   - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மஹசாமுண்ட் மாவட்டம் காந்த்புல்ஹர் கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு செங்கலை சுடுவதற்கு தொழிலாளர்கள் 6 பேர் தீ வைத்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் தீ வைக்கப்பட்ட சுடு செங்கல் மேடை மீது படுத்து உறங்கியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று காலை மற்ற தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளனர். அங்கு செங்கல் மேடையில் சக ஊழியர்கள் ஆறு பேர் படுத்து கிடப்பதை பார்த்து அவர்களை எழுப்பியுள்ளனர். 

அப்போது, அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, உயிருக்கு போராடிய அந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், தொழிலாளர்கள் செங்கல் சூளையில் செங்கல்லை சூடுபடுத்துவதற்குத் தீ வைத்துவிட்டு அதன் மேல் அடுக்கில் படுத்து உறங்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chateegarh five peoples died in brick kiln for breath smoke


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->