பணதகராறில் பாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - பேரன் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே கொருக்குப்பேட்டையில் உள்ள கருமாரியம்மன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி. 70 வயதான இவர், வீட்டு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவரின் மகள் அமுதா. 

இவர் தனது குடும்பத்துடன் செங்குன்றத்தை அடுத்துள்ள காந்தி நகர் நேரு தெருவில் வசித்து வருகிறார். அமுதாவின் மகன் சதீஷ். இந்நிலையில் விசாலாட்சி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகள் அமுதாவுக்கு புதிய வீடு கட்ட ரூ.2 லட்சம் கடனாக கொடுத்தார். அந்த கடனில், ரூ.1 லட்சத்தை அமுதா தனது தாயிடம் திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள1 லட்சத்தைக் கொடுக்கவில்லை 

இது குறித்து, விசாலாட்சி தனது மகளிடம் பணத்தை தருமாறு அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் அமுதாவிற்கும் விசாலாட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அமுதா, தனது மகன் சதீசுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் விசாலாட்சி வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்களுக்கிடையே ரூ.1 லட்சம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் கோபம் அடைந்த சதீஷ், வீட்டில் இருந்த சுத்தியலால் பாட்டி விசாலாட்சி தலையில் அடித்தது மட்டுமில்லாமல், பிளேடாலும் விசாலாட்சியின் உடலை கிழித்துள்ளார். வலியால் கதறிய விசாலாட்சியின் கதறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தலையில் அடிபட்டு ரத்தம் ஓடிய நிலையில் இருந்த விசாலாட்சியியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விசாலாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாட்டியை அடித்துக்கொன்ற பேரன் சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai old lady died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->