குஜராத் : காய்ச்சலால் உயிரிழந்த பெண்.! எச்3என்2 வைரஸ் தான் காரணமா? - Seithipunal
Seithipunal


குஜராத்தில் காய்ச்சலால் உயிரிழந்த மூதாட்டியின் மாதிரிகள் எச்3என்2 வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் கடந்த 11ம் தேதி அன்று  58 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சர் சாயாஜிராவ் ஜெனரல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த பெண் கடந்த 13ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காய்ச்சலால் உயிரிழந்த அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் இருக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

இது குறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "உயிரிழந்த பெண்ணின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணத்தை மறுஆய்வுக் குழு கண்டுபிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்ததாவது, "குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரைக்கும் பருவகால இன்ஃப்ளூயன்சாவின் துணை வகை எச்3என்2 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று ஆக பதிவாகியுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near gujarat old woman died for fever


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->