ஜார்கண்ட்டில் மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்த லதேஹர் மாவட்டத்தின் புடாபஹாட் பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட 120 வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர்  கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அந்த பொருட்கள் அனைத்தும் செயலிழக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, கடந்த வியாழக்கிழமை லதேஹர் மற்றும் கர்வா மாவட்டங்களில் சுமார் 15 கிலோ எடையுள்ள குக்கர் வெடிகுண்டு, ஒரு கிளைமோர் மைன், மூன்று டெட்டனேட்டர்கள், ஒரு மோட்டோரோலா வயர்லெஸ் செட், இரண்டு வெடிமருந்து பைகள் மற்றும் நக்சல் இலக்கியங்கள் போன்றவற்றை பாதுகாப்பு படையினர்  கண்டறிந்து கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். 

இதற்கு முன்னதாக மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கோல்ஹான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தலைவர் மிசிர் பெஸ்ரா சாகரை கைது செய்யும் செயலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ​​பாதுகாப்புப் படையினர் 16 ஐஇடிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jarkant maoist 120 Explosives recover


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->