கோடியில ஒருவருக்குத்தான்... வயிற்றுவலியால் துடித்த இளைஞர்.!! மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த சோதனையை செய்த பின்னர், ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், சிறுவயதில் இருந்தே அப்படியுள்ளது என்றும் அவரிடம் தெரிவித்து, பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

அறுவை சிகிச்சையின் போது, வாலிபரின் உடலுக்குள் முழு அளவில் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, கருப்பை மற்றும் அதற்கான குழல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளும் வாலிபருடைய உடலின் உள்ளே வளர்ந்து இருந்துள்ளன. 

இதுகுறித்து மருத்துவர் தாரா சங்கர் ஜா தெரிவித்தபோது, "உலகத்தில் உள்ள கோடிக்கணக்கானோரில் ஒருவருக்கு தான் இதுபோன்று ஏற்படும். அதன்படி, ஒரே நபருக்கு ஆண் மற்றும் பெண் உள்ளுறுப்புகள் காணப்படும். 

இந்த அறுவை சிகிச்சையில் அவரின் அனைத்து பெண் இனப்பெருக்க உறுப்புகளும் உடலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. அந்த வாலிபர் தற்போது உடல்நலமுடன் நன்றாக உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jarkant young man stomak pain for two reproductive organs remove


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->