கர்நாடகா : எம்.எல்.ஏ கார் மோதி மூதாட்டி பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம் கனககிரி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் பசவராஜ் தடேசுகுர். இவர்
முன்தினம் கனககிரியில் இருந்து காரடகி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் கார் காரடகி அருகே மயிலாப்பூர் கிராஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையை கடக்க முயன்ற ஒரு மூதாட்டியின் மீது மோதியது. 

அதனால், தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி பலத்த காயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பசவராஜ், அந்த மூதாட்டியை தனது காரில் ஏற்றி சென்று காரடகி அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

அங்கு அந்த மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், உயிரிழந்த மூதாட்டியின் பெயர் மரியம்மா நாயக் என்பதும், அவர் மயிலாப்பூர் கிராசில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மரியம்மா, முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக சாலூர் என்ற கிராமத்திற்கு சென்று ஓய்வூதியம் பெற்றுவிட்டு அங்கிருந்து பேருந்தில் வந்து மயிலாப்பூர் கிராசில் இறங்கினார்.

அங்கு இறங்கிய அவர் சாலையை கடக்க முயன்ற போது தான் எம்.எல்.ஏ.வின் கார் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில்,, இந்த விபத்து தொடர்பாக எம்.எல்.ஏ. பசவராஜ் தடேசுகுர் தெரிவித்ததாவது,

"எனது கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்கு காரை ஓட்டுனர் திருப்பிய போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது  மோதிவிட்டது' என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga old lady died for car accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->