ஆட்டோவில் வெடித்த மர்ம பொருள் - நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்ட போலீசார்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை பயணி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த போது, திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது. அதில், ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று எடுக்கப்பட்டதனால், ஆட்டோவில் குக்கர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும், ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தினால், தமிழகம் முழுவதும் போலீசார் தயார்நிலையில் உள்ளனர். அதன்படி, நள்ளிரவில் சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, அந்த வழியாக செல்லும் வாகனங்களில் சோதனை செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka auto fire accident police checking all vechicles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->