கர்நாடகா : கல்லூரி மாணவிக்கு விடுதியில் வைத்து பிரசவம் பார்த்த வாடர்ன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் சுமார் இருநூறுக்குக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 

அந்த விடுதியில் தங்கியிருக்கும் பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு, விடுதியில் வைத்தே வார்டன் பிரசவம் பார்த்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து அவர் வேறு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சமூக நலத்துறை அதிகாரிக்கு மட்டும் தெரிவித்துள்ளார்.  

இதையடுத்து கல்லூரி மாணவிக்கும், குழந்தைக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தலித் அமைப்பினர், "கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த விடுதி வார்டன் மற்றும் அந்த தகவலை மறைத்த சமூக நலத்துறை அதிகாரி உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், மாணவி கர்ப்பம் அடைந்தது எப்படி? என்று விசாரிக்காமலேயே, இதனை யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டனர். இதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near Karnataka college student birth a baby by Waddern


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->