17 வயது சிறுமியை கடத்திய டைரக்டர்.! போக்சோவில் கைது.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டை அடுத்த வடகரை பகுதியில் 17 வயது சிறுமி திடீரென மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் வடகரை போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், சிறுமி அதே பகுதியை சேர்ந்த சினிமா டைரக்டர் ஜாசிக் அலி என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. மேலும் ஜாசிக் அலி, அந்த சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, போலீசார் ஜாசிக் அலியின் செல்போன் மூலம் அவர்களின் இருப்பிடத்தை தேடியதில், அவர்கள் கர்நாடகா மாநிலத்தி உள்ள பெங்களூருவில் மறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர், போலீசார் உடனே பெங்களூருக்கு சென்று அவர்களை தேடினர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஒரு லாட்ஜில் இருப்பதை அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டனர்.

மேலும், ஜாசிக் அலிக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் ஷம்னாராஜ் என்பவரையும் பிடித்தனர். போக்சோ வழக்கில் கைது செய்த இருவரையும் போலீசார் விசாரணைக்காக வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த பின்னர், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதையடுத்து, மீட்கப்பட்ட 17 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka directer kidnape seventeen years girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->