கேரளா || சோகத்தில் தத்தளித்த குடும்பம்.! கதவை தட்டிய அதிர்ஷ்டம்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூக்குஞ்சு. இவர் ஒரு மீனவர். இந்நிலையில் இவர் வீடு ஒன்றை கட்டுவதற்காக கருணாகபள்ளியில் உள்ள யூனியன் வங்கியில் ரூ.9 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். ஆனால், அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. 

இதனால், வட்டி அதிகரித்தது. இறுதியில், வங்கியில் இருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவருக்கு இரண்டுக் குழந்தைகள் உள்ளதனால், அவரால் வீட்டை விற்கவும் முடியவில்லை. 

இந்நிலையில், அன்று மாலை அவரது சகோதரரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய அவரது சகோதரி, ஏ.இசட்.907042 என்ற எண் உடைய  அட்சயா லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதையறிந்த அவர் உடனடியாக ஓடி சென்று தனது லாட்டரி சீட்டை எடுத்து பார்த்தார். கடந்த 12-ந்தேதி கேரள அரசு வெளியிட்ட ரூ.70 லட்சம் பரிசு தொகை கொண்ட அட்சயா லாட்டரி சீட்டு ஒன்றை அவர் வாங்கி இருக்கிறார். அந்த லாட்டரி சீட்டு அவருக்கு கை மேல் பலன் கொடுத்து உள்ளது. 

மறு நாள், அவருக்கு சொத்து முடக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பிய அதே வங்கிக்கு, தனது பரிசு தொகையை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஏறக்குறைய ரூ.10 லட்சம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ள கடன் தொகையை அடைத்து விட்டு, சிறிய அளவில் தொழில் தொடங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala lottory seet win family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->