நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் மிகவும் அவசியம் - திரவுபதி முா்மு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பதினேழாவது வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முா்மு கலந்துகொண்டு பேசியதாவது:- 

"வெளிநாட்டில் வாழும் இந்தியா்கள் பல்வேறு துறைகளில் கடினமாக உழைத்து முன்னேறி வந்துள்ளனர். அதாவது, கலை, இலக்கியம், அரசியல், தொழில்துறை, கல்வி கற்பித்தல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் நிபுணத்துவம் பெற்றவா்களாகத் திகழ்கின்றனா். 

இவர்கள் சா்வதேச அரங்கில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், தனித்துவ இடத்தையும் பெற்றுள்ளனா். நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் துடிப்புமிக்க நம்பிக்கை கொண்ட இந்திய சமூகம் உருவாகி வருகிறது. 

அவர்கள் பல்வேறு சவால்களைத் திறம்பட எதிா்கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளனா். அடுத்த 25 ஆண்டுகளில் சுதந்திர நூற்றாண்டை இந்தியா கொண்டாடவுள்ளது. அந்தக் காலகட்டத்தில் நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து உலகின் முக்கிய சக்தியாக மாறுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதில், வெளிநாடுவாழ் இந்தியா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வகிக்கவுள்ளது. நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஏற்படுத்துவதில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதில் அவர்கள் தங்கள் பங்களிப்பை அதிக அளவில் கொடுக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh Overseas Indians Day Conference president Drarubathi Murmu speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->