மகாராஷ்டிரா : சொத்து பிரச்சனையில் தாயை தலையில் அடித்துக்கொன்ற மகன் கைது.!
near maharastra son kill mother for property probalm
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில், கடந்த செவ்வாய்கிழமை இரவு, கல்பதரு சொசைட்டியின் பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் காணாமல் போனதாக ஜூஹூ காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மூதாட்டியின் மொபைல் இருப்பிடம் அவரது மகன் இருக்கும் கட்டிடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் மகனையும் அவருடைய வேலைக்காரனையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
அப்போது, அவர் சொத்துத்தகராறில் தனது தாயின் தலையை பலமுறை பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்று, உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள மாத்தேரான் அருகே ஆற்றில் வீசியதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் மூதாட்டியின் மகனையும், அவருடைய வேலைக்காரனையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
near maharastra son kill mother for property probalm