மகாராஷ்டிரா : ஓடும் ஸ்கூட்டரில் இருந்து பறந்த பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் நேற்று நிலத்திற்கு அடியில் செலும் குடிநீர் குழாய் ஒன்று வெடித்துள்ளது. இதனால், தண்ணீர் பீய்ச்சு அடித்து வெளியேறியதால் சாலையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. 

அந்த சமயத்தில் அந்த வழியாக ஸ்கூட்டரில் இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவர் அந்த பள்ளத்தை கவனிக்காமல் சென்றதால், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்," சாலைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் இளம் பெண் ஒருவர் வந்துள்ளார்.குழாயில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் அவர் மீது விழுகிறது" என்று பதிவாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra woman injury for water pipe explosion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->