மத்திய பிரதேசம் || ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.! இரண்டு எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு.!
near matya pradesh two ministers arrested for sexually harassment
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"நேற்று மத்தியபிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்மா தொகுதி எம்.எல்.ஏ. சுனில் சரப் மற்றும் சத்னா தொகுதி எம்.எல்.ஏ. சித்தார்த் குஷ்வாஹா ஆகிய இருவரும் ரிவான்ஷல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏசி வகுப்பில் பயணித்து வந்துள்ளனர்.
கர்னி ரெயில் நிலையத்தில் இருந்து ஏறிய இரண்டு பேரும் மதுபோதையில் இருந்துளனர். ரெயிலில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பயணித்த அதே ஏசி வகுப்பில் ஒரு பெண் தனது குழந்தையுடன் பயணித்துள்ளார். இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் தனது கணவருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அந்த பெண்ணின் கணவர் ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே போலீசை டேக் செய்து தொடர்ந்து டுவிட்டரில் சம்பவம் குறித்து அடுத்தடுத்து தகவலை பதிவு செய்துள்ளார்.
போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
near matya pradesh two ministers arrested for sexually harassment