மும்பை : குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்.! விசாரணையின் போது திடீரென உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாந்திரா பெர்ரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் இனாயத் அலி சாஜன். இவர் ஒரு குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி கடந்த சனிக்கிழமை போலீசார் அவரை விசாரணை செய்வதற்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 

அங்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவருக்கு தண்ணீர் கொடுத்த பிறகும் அவர் மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளார். அதன் பின்னர் போலீசார் இனாயத் அலி சாஜனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருபவர் தெரிவித்ததாவது, "பிரேத பரிசோதனையின் முடிவு வந்த பிறகு தான் இனாயத் அலி சாஜன் ஏன் உயிரிழந்தார்? என்பது தெரியவரும் என்றுத் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல் நிலையத்தில், விசாரணையின் போது உயிரிழந்த இனாயத் அலி சாஜன் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகரின் பேரனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai accuest died in police station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->