மும்பை || தலை தூக்கும் தட்டம்மை.! பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!
near mumbai children died for Measles
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் கோவண்டி பகுதியில், சிலநாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் மர்மான முறையில் உயிரிழந்தன.
இதுகுறித்து, நடைபெற்ற விசாரணையில், அந்த நகரில் தட்டம்மை நோய் பரவி வருவதும், இதன் காரணமாகத்தான் அந்த மூன்று குழந்தைகளும் உயிரிழந்தது தெரியவந்தது.
அதன் பின்னர் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய குழு மும்பை நகருக்கு வந்தது. அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நோய் பரவலை தடுப்பதற்காக சுகாதாரத்துறை, மாநகராட்சிக்கு வழிகாட்டுதலை வழங்கினார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பை நகரில் உள்ள கஸ்துர்பா மருத்துவமனையில் தட்டம்மைக்கு சிகிச்சை பெற்று வந்த ஆறு மாத பெண் குழந்தை சகினா அன்சாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பையில், பிவண்டி பகுதியை சேர்ந்த அந்த குழந்தை, கடந்த 13-ந் தேதி தட்டம்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இதன் மூலம் மும்பையில் தட்டம்மைக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை எட்டு ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் கஸ்துர்பா மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- மும்பை நகரில் தட்டம்மை பரவ தொடங்கியதற்கு பிறகு 12 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி போடாததால் தான் தட்டம்மை பரவல் அதிகரித்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து பொது மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
near mumbai children died for Measles