பயிற்சி மருத்துவரை தாக்கிய போலீசார் - மும்பையில் பரபரப்பு.!
near mumbai police officer attack training doctor
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் சயான் பகுதியில் லோக்மானிய திலக் மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள எலும்பியல் பிரிவில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த மருத்துவமனைக்கு வந்த சுன்னாப்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஜித்தேந்திர ஜாதவ் என்பவர் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அந்த நோயாளியை அழைத்து செல்ல முயன்றார்.
இதைப்பார்த்த அந்த மருத்துவமனையில் முதலாம் ஆண்டு பயின்று வந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் அந்த போலீசாரை தடுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த போலீஸ்காரர் பயிற்சி மருத்துவரை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவமனையின் டீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மகாராஷ்டிரா ரெசிடென்ட் மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதில் மருத்துவரை தாக்கிய போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் படி, போலீஸ்காரர் ஜித்தேந்திர ஜாதவிடம் மன்னிப்பு கடிதம் பெறப்பட்டது. மேலும் அந்த போலீஸ்காரர் மீது துறை நீதியான விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
near mumbai police officer attack training doctor