மும்பை : கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதிய வாகனம் - இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகர் மலாடு மால்வானி பகுதியை சேர்ந்தவர் அமீர் சேக். இவரது நண்பர் சலீம் சையத் . இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டு சென்றனர். 

அப்போது வர்கள் ஒட்டிச் சென்ற இருசக்கரவாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதனால், தூக்கி வீசப்பட்ட இருவரும் சாலையோரம் நின்ற தென்னை மரத்தில் மோதி கீழே விழுந்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதன் பின்னர், போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சலீம் சையத் இருசக்கர வாகனத்தை அலட்சியமாகவும் அதிவேகமாகவும் ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai two youths died for bike accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->