மும்பை || பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர்கள்.! அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காட்கோபர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பத்தொன்பது வயது மாணவர் ஆகாஷ். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் வணிக கல்வி பயின்று வருகிறார். 

இந்நிலையில், இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால், இதனை கொண்டாட தானே மாவட்டம் அம்பர்நாத்தில் உள்ள கோண்டதேவ் சிவன் கோவிலுக்கு நண்பர்களாகிய பாபா மஞ்ரேக்கர், சூரஜ் சால்வே, லினஸ் பாஸ்கர் உள்ளிட்டோருடன் சென்றார். 

இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் அங்கிருந்த நீர்தேக்கத்தில் குளிப்பதற்காக உள்ளே இறங்கினர். நீர்த்தேக்கத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் நான்கு  பேரும் தண்ணீரில் ஒன்றன்பின் ஒன்றாக மூழ்கினர்.

இதனை கண்ட பொதுமக்கள் இளைஞர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆழம் அதிகம் இருந்ததால் உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் படகின் மூலம் தண்ணீரில் மூழ்கிய நான்கு பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன் பின்னர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில், டாக்டர் நடத்திய பரிசோதனையில் 4 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து அம்பர்நாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai young mans died for birthday celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->