பஞ்சாப் : தகன மேடையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்.!
near punjap new year cake cut celebrating in Crematorium
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் ராயியா கிராமத்தில் 'முட்டாள் கிளப்' என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது சமூகத்தில் காணப்பட கூடிய ஊழல், போதை பொருள், பயங்கரவாதம், மூட நம்பிக்கை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக போராடி வருகிறது.
இந்நிலையில், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பேய் முகமூடி அணிந்து, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை பதிவு செய்யும் வகையில், கருப்பு உடை அணிந்து, தகன மேடையில் கேக் வெட்டி, இந்திப்பாடலுக்கு நடனமும் ஆடி 2022-ம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் நிகழ்வை கொண்டாடினார்கள்.
இந்த கொண்டாட்டம் சமூக நலன்களுக்கு எதிரான விசயங்களை எதிர்த்து போராடும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவை சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீந்தர் ரிக்கி என்பவர் உருவாக்கி, தகன மேடையில் புத்தாண்டு விழாவை கொண்டாடினார். அதனை நினைவுகூரும் வகையில் இந்த வருடமும் தகன மேடையில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது.
English Summary
near punjap new year cake cut celebrating in Crematorium