ராஜஸ்தான் : ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச்சென்ற ஊழியர் பணி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச்சென்றதாக கூறி தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவுசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஷிவ்ராம் மீனா தெரிவித்ததாவது:- 

"தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரை நாங்கள் பணியில் இருந்து நீக்கிவிட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒரு குழுவையும் அமைத்துள்ளோம். 

இந்த குழு சம்பவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். 

இந்த சம்பவம் இன்று காலையில் தான் என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்." என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajasthan ambulance driver dismiss for foot wear transported


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->