தெலுங்கானா : பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் நுழைந்த தாசில்தார்.! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
near telungana tahsildar arrested for entered woman ias officer house in midnight
தெலுங்கானா மாநிலத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளவர் சுமிதா சபர்வால். மாநில முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வரும் இவருடைய வீடு ஐதராபாத் நகரில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது.
![](https://img.seithipunal.com/media/crime kjsd-zy8zv.png)
இந்த நிலையில், நேற்று இரவு சுமிதா சபர்வாலின் வீட்டிற்குள் ஆண் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். இதையறிந்த சுமிதா உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர்களுக்குத் தகவல் அளித்துள்ளார்.
அதன் படி, பாதுகாவலர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த ஆண் நபரை பிடித்தனர். அதன் பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் ஆனந்த் என்பதும், அவர் துணை தாசில்தாரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், வீட்டிற்கு வெளியே ஆனந்தின் நண்பரும் காரில் இருந்துள்ளார். அவரையும் பாதுகாவலர்கள் பிடித்துள்ளனர். அதன் பின்னர், இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் பதவி உயர்வு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சுமிதாவை நேரில் சந்தித்து பேசவந்ததாக தெரிவித்தனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 004.jpg)
இதைத்தொடர்ந்து, தாசில்தார் மற்றும் அவருடைய நபர்கள் மீதும் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா புகார் அளித்தார். ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near telungana tahsildar arrested for entered woman ias officer house in midnight