உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை - போலீசார் அதிரடி.!
near uttar pradesh popular rowdy shoot dead
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ்பால். இவர் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்தலில் ராஜ்பாலிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவர் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவராக இருப்பது தெரியவந்தது.
மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பிரபல தாதாவான அஸ்ரப்பின் அண்ணன் அதிக் அகமது தலைமையிலான ரவுடிகள் தான் ராஜ்பால் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தக் கொலை சம்பந்தமாக அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் உள்பட நாற்பது பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இந்த குற்றச்சாட்டில் முக்கிய சாட்சியாக இருந்து வந்த உமேஷ்பால் கடந்த வாரம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை அதிக் அகமதின் கும்பல்தான் கொலை செய்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீசார் பிரயாக் ராஜ் மாவட்டத்தில் நடத்திய சோதனையில் குற்றவாளிகளில் ஒருவரான அர்பாஸ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ராஜ்பால் கொலையில் முக்கிய சாட்சியான உமேஷ்பாலை மிக அருகில் நின்று சுட்டுக்கொன்றவரான விஜயக்குமார் என்ற உஸ்மான் சவுத்ரி பிரயாக் ராஜ் நகரில் பதுங்கியிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.
அதன் பின்னர் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
English Summary
near uttar pradesh popular rowdy shoot dead