உ. பியில் அதிர்ச்சி - திருமணத்தில் காருக்கு பதில் புல்டோசரை வழங்கிய மாமனார்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, குறிப்பிட்ட குற்ற செயல்களை செய்வோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் உள்ளது. 

இந்த நடவடிக்கையின் மூலம் தவறுகள் குறைவதுடன், குற்றம் செய்வதற்கு குற்றவாளிகள் அஞ்சும் நிலையும் காணப்படுகிறது. இதனால், உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசர் நினைவுக்கு வரும் அளவிற்கு மாறி உள்ளது. 

இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போதும் இந்த விவகாரம் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பரசுராம் பிரஜாபதி என்பவர் தனது மகள் நேகாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முடிவு செய்துள்ளார். 

அதன்படி, சாவன்கார் பகுதியை சேர்ந்த யோகேந்திரா பிரஜாபதி என்பவருக்கும், பரசுராம் பிரஜாபதி மகள் நேகாவுக்கும் திருமணம் நிச்சயமானது. யோகேந்திரா கடற்படை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். 

பொதுவாக திருமணத்தில் மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக மாமனார் ஆடம்பர ரக காரை தருவார்கள். ஆனால், பரசுராம் பிரஜாபதி காருக்கு பதிலாக புல்டோசரை வழங்கியுள்ளார்.

இது குறித்து பரசுராம் தெரிவித்ததாவது, "தனது மகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், பணம் ஈட்டுவதற்கு இந்த புல்டோசரை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttara pradesh father in law marriage gift buldosar to son in law


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->