உ.பி : இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த வாலிபர்கள்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றில் சிறுமி ஒருவர் வாகனத்தை ஓட்டி சென்ற நபரை இறுக்கி அணைத்தபடி சென்ற வீடியோ சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலானது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, பொது இடத்தில் ஆபாச செய்கைகளை பரப்பும் நோக்கில் நடந்து கொண்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், நேற்று மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், இரண்டு பேர் கையில் ஆயுதங்களை எடுத்து காட்டியபடி, இருசக்கர வாகனம் ஒன்றில் சாலைகளில் சுற்றி திரிந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

அதன் பின்னர் தான் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttarpradesh young mans arrested for bike ride with gun


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->