நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!
NEET Exam fees increased
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2023 - 2024 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கட்டணத்தை தற்போது தேசிய தேர்வு முகமை உயர்த்தியுள்ளது. அதன்படி, கடந்த வருடத்தை விட தற்போது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொது பிரிவினருக்கு 1,700 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் EWS பிரிவினருக்கு 1,600 ரூபாயும், எஸ்.சி ,எஸ்.டி பிரிவினருக்கு 1,000 ரூபாயும் வசூலிக்கபட உள்ளது.