முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும்! - Seithipunal
Seithipunal


டெல்லி : முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. இளங்கலை நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் 720க்கு 720 எடுத்தனர்.

அது மட்டும் இல்லாமல் ஒரு தேர்வு மையத்தில் தேர் எழுதிய 7 பேர் முதல் மதிப்பெண் பெற்ற சம்பவம் நீட் தேர்வில் குளறுபடிகள்  நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது. நீட் தேர்வு வினாத்தாள்க்கசிவு சம்பந்தமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்த நிலையில் முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET for Masters will be held next month on 11th August


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->