சோகம் - நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை.!
neet student sucide in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, அங்கேயே தங்கி, ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பீவார் நகரில் உள்ள ராஸ் பகுதியை சேர்ந்த ரோகித் பாட்டி என்பவர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். இவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மாணவரின் விடுதி அறையில் சோதனை நடத்தியதில் தற்கொலை குறிப்பு ஒன்று
கண்டெடுக்கப்பட்டது.
அதில், என்னை மன்னித்து கொள்ளுங்கள் சின்னு என்றுக் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
neet student sucide in rajasthan