நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.. கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன.? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளநிலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்தமார்ச் 6-ம் தேதி தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட் மற்றும் நீட் தேர்வு தொடர்பான மையங்களை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும் என்றும், 1.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மாணவர்கள் செல்போன் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது.

நீட் தேர்வு எழுத சொல்லும் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது.

அதேபோல் மாணவிகள் மூக்குத்தி, தோடு போன்ற அணிகலன்களை அணியக்கூடாது.

மேலும் தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது. பெண்கள் கிளிப் போடக்கூடாது மற்றும் ஆண்கள் பெல்ட் அணிய கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET UG 2023 exam students follow introduction


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->