நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!
NEET UG exam apply last day on April 13
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற மே மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 6ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்தது. இந்த நிலையில், விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விருப்பமுள்ளவர்கள் மாணவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
English Summary
NEET UG exam apply last day on April 13