நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு? லெஃப்ட், ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்! சரமாரி கேள்வி, தடுமாறிய மத்திய அரசு!  - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு குறித்த வழன்னு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, "நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீட் வினாத்தாள் கசிவின் தாக்கம் எப்படி என்பதே தற்போதைய கேள்வி.

நீட் வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களை மட்டும் கண்டறிந்தால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாம். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டறிய சைபர் குற்ற தடவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா?

கசிந்த வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி? வினாத்தாள் லாக்கருக்கு எப்போது அனுப்பப்பட்டது?, லாக்கர்களில் இருந்து எப்போது அவை எடுக்கப்பட்டன? நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன? நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன? 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? அதில் முழு மதிப்பெண்கள்  பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா? என தேர்வு முகமையை நோக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், 24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை மற்றும் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் உண்மையாக, கடின உழைப்பால் தேர்வு எழுதியுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீட் தேர்வு நடைமுறையில் நம்பிக்கை இல்லாவிட்டால், அது  குறித்த சந்தேகங்கள் எழுந்துவிட்டால், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.

எஸ்பிஐ, கனரா வங்கி லாக்கர்களுக்கு நீட் தேர்வு வினாத்தாள் அனுப்பப்பட்டது குறித்தும், தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டது குறித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் தான் பிரச்னையை தீர்க்க முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

மேலும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா? என்ற நீதிபதி சந்திரசூட் கேள்விக்கு, ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த மாணவர்களின் மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை பதிலளித்தது. 

இதனையடுத்து, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்யவும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான நடவடிக்கையை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய அரசுக்கும், தேர்வு முகாமைக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET UG PaperLeak SupremeCourt National Testing Agency


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->