4 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார் "நேபாள பிரதமர்"..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா இன்று இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இதையடுத்து 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நேபாள பிரதமர், ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரையும் சந்திக்கிறார்.

மேலும் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார். இதில் மின்துறை ஒத்துழைப்பு, இரு அண்டை நாடுகளுக்கு இடையே நிதி இணைப்பை வலுப்படுத்துதல், ரக்சால்-காத்மாண்டு ரயில் இணைப்பு, மோதிஹாரி-அம்லெக்குஞ்ச் பெட்ரோலிய குழாய் மற்றும் சிலிகுரியில் இருந்து ஜாப்பா வரை எண்ணெய் குழாய் விரிவாக்கம் போன்ற புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepal Prime Minister is coming to India today on a 4 day visit


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->