முல்லை பெரியாற்றில் கேரள அரசு சார்பில் புதிய அணை.. கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இதன் பராமரிப்பு தமிழக அரசிடம் உள்ளது. இந்த அணையின் நீர் தேக்கி வைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2014 மே மாதம் அளித்த தீர்ப்பில் 142 அடி தண்ணீரைத் தேக்கி வைக்க அனுமதி அளித்தது. இதை எதிர்த்து கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனிடையே கேரள அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,  126 ஆண்டு பழைய அணை பாதுகாப்பானதல்ல. அணைக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவது நிரந்தர தீர்வாக இருக்கும். கேரளாவில் 2018 முதல் 2021 வரை தொடர்ந்து நான்கு பருவ மழை காலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக இடுக்கியில் கடும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது.  2014 இல் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும். அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், முல்லைப் பெரியாறு ஆற்றில் கேரள அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்த்த கூடாது என கேரளா சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new dam for mullaiperiyar river


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->