புதுடெல்லி | கணவரிடம் தகாத உறவு! தங்கையை கொல்ல முயன்ற அக்கா! சுற்றி வளைத்த போலீசார்! - Seithipunal
Seithipunal


புது டெல்லி, வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா அருகே புலாந்த் மஸ்ஜித் பகுதியை சேர்ந்த சகோதரிகளான சோனு (வயது 30) மற்றும் இவரது தங்கை சுமைலா. 

சோனுவிற்கு திருமணமான நிலையில் கணவருடன் வசித்து வசிக்கிறார். தனது கணவருக்கும் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவு இருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார்.

இந்த பிரச்சனையால் தொடர்ந்து சகோதரிகள் இருவருக்கும் தகராறு நடந்து வந்த நிலையில், இது தொடர்பான வாக்குவாதம் நேற்று மாலை மீண்டும் நடைபெற்றது. 

அப்போது ஆத்திரமடைந்த சோனு, துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு,  அந்த துப்பாக்கியின் பின்புறத்தால் தங்கையின் முகத்தில் பலமாக அடித்துள்ளார். 

இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, பின்னர் காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்து, சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Delhi Inappropriate relationship sister tried to kill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->