திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர்.!! மாப்பிளையை பழி வாங்கிய சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர்.!! மாப்பிளையை பழி வாங்கிய சம்பவம்.!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபீர்தாம் மாவட்டத்தில் சமாரி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமேந்திரா மெரவி. இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேற்று திருமணத்திற்கு வந்த பரிசுகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மணமகன் ஹேமேந்திரா மெரவி தனக்கு பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டரை திறந்து பார்த்து, அதன் வயரை எலக்ட்ரிக் போர்டில் இணைத்துள்ளார். உடனே ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் மேரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் ஒன்றரை வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெராவியின் சகோதரர் மட்டும் உயிரிழந்த நிலையில், மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- 

"வெடிவிபத்தை ஏற்படுத்தக்கூடிய வேறு எந்தப் பொருளும் அந்த அறையில் இல்லை. ஹோம் தியேட்டர் மட்டுமே தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. வெடி விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகு தெரியவரும்" என்றது தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new married man died for home theater explossion in chateesgarh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->