இனி படுத்துக்கெண்டே பயணம் செய்யலாம் - மத்திய அரசு புதிய முயற்சி.!
new vande bharat train launch in india
பயணிகளின் நேரத்தைக் குறைக்கும் வகையில் நவீன வசதிகளுடன், இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் இன்னும் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- "இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை கட்டமைக்கும் பணியானது நிறைவு கட்டத்தில் உள்ளது. இந்த ரயில் இன்னும் இரண்டு மாதங்களில் இயக்கப்படும். பொதுமக்கள் உள்பட பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும்.
இந்த படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயிலானது, பயணிகளுக்கு, எளிய முறையில் இயங்குவதற்கான வசதிகளை வழங்கும். சர்வதேச தரநிலைகளுடனான பல்வேறு வசதிகளுடன் ரெயில் வடிவமைக்கப்பட்டு வருங்காலத்தில் செயல்பாட்டிற்கு வரும்.
கடுமையான பாதுகாப்பு தரநிலைகளுடன் ரெயில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ரெயிலின் உட்புறம், வெளிப்புறம், ரெயிலின் முகப்பு பகுதி, இருக்கைகள், உட்புற விளக்குகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை அழகுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
இந்த ரெயிலானது, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. நீண்டதொலைவு பயணத்திற்கு ஏற்ற வகையில், வடிவமைக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
new vande bharat train launch in india