மருத்துவராக பணியாற்ற ஒரே தகுதி தேர்வு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


எம்பிபிஎஸ் முடித்த மாணவர்கள் மருத்துவராக பணியாற்றவும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் National Exit Test (NExt) என்ற தகுதி தேர்வை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை ஒருங்கிணைத்து இந்த NExt தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகளை கொண்டது.  இதில் கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு National Exit Test (NExt) என்ற தகுதி தேர்வை கட்டாயமாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தேர்வு கொண்டு வர முயற்சி செய்தபோது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தால் அமல்படுத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த தகுதி தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NExt Medical entrance exam in India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->