நிபா வைரஸால் சிறுவன் உயிரிழப்பு - வௌவால்களில் இருந்து பரவியது உறுதி.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு கடந்த ஜூன் மாதம் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் மாதிரி சேகரிக்கப்பட்டு, புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட்டிற்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுவனுக்கு தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஜூலை 21ம் தேதி சிறுவன் உயிரிழந்தார். இதற்கிடையே, சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் இருந்த கடை ஒன்றில் இருந்து பழம் வாங்கி சாப்பிட்டதும், அந்த கடையில் வௌவால்கள் நடமாட்டம் இருந்ததும் தெரிய வந்தது. 

உடனே சிறுவன் வசித்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்த வௌவால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த சோதனையில், வௌவால்களில் இருந்து நிபா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது:-

"சிறுவன் பழம் வாங்கி சாப்பிட்ட பகுதியில் இருந்து 27 வௌவால்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், ஆறு வௌவால்களில் நிபா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 472 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களில் யாருடைய உடலிலும் நிபா வைரஸ் இல்லை. 

இருப்பினும், நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 261 பேர், 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். நிபா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

niffa virus spred from bat kerala health department info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->