ரவுடி சீசிங் ராஜா இல்லத்தில் கள்ளத் துப்பாக்கி?...வில்லிவாக்கம், சேலையூரில் இன்று ரெய்டு! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கருதப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை போலீசார்  என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். பின்னர் அவருக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  ரவுடி சீசிங் ராஜாவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய உறவினர்களின் வீடுகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை வில்லிவாக்கம், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

என்கவுண்டர் செய்யப்பட சீசிங் ராஜா ரவுடியாக இருந்தபோது வசூல் செய்த பணம் ஏதேனும் உள்ளதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா, கள்ளத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வருவாய் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A fake gun in the house of rowdy sising raja raid today in selaiyur villivakkam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->