ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புற்றுநோய் பிரிவில் பணிபுரிந்த மருத்துவர் பாலாஜி மீது வாலிபர் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் கத்தியால் குத்திய வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அணைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள். ஊழியர்களின் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்புக் கேமரா பொறுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் செவிலியர்கள் பணியில் இருப்பதைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cctv camera fix in government hospitals in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->