காட்பாடியில் அதிர்ச்சி!...ஒரே தெருவை சேர்ந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள்  ராமசாமி - மீனாட்சி தம்பதி. 84 வயதான ராமசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர்களது வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் காலிங் பெல் தொடர்ந்து அடித்துள்ளது.

இதையடுத்து  மீனாட்சி வீட்டை விட்டு வெளியே வந்து கதவினை திறந்த போது, இருட்டில் மறைந்திருந்த 2 பேர் மீனாட்சி கழுத்தில் அணிந்து இருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசில் தம்பதியினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மீனாட்சி வீட்டின் அருகே  2 வாலிபர்கள் சுற்றிந்திரிந்தபடி நோட்டமிட்டதும், அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in katpadi young men from the same street stole 6 shaver gold chains from an old lady


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->