மிஸ் இந்தியா 2024 பட்டத்தை தட்டிச் சென்றார் நிகிதா போர்வால்! - Seithipunal
Seithipunal


மிஸ் இந்தியா அழகிப் போட்டி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போட்டிகள் மூலம்  ஏராளமான இளம் பெண்கள் சின்னத்திரை, சினிமா, பொழுதுபோக்கு, பேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜொலித்து வருகின்றனர்.

மேலும் சின்னத்திரை, சினிமா, பொழுதுபோக்கு, பேஷன் உள்ளிட்ட துறைகளில் வெற்றியாளர்களாக திகழ்வதற்கு இந்த அழகிப் போட்டி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது என்றே கூறலாம்.

60 ஆண்டுகள் கடந்த இந்த மிஸ் இந்தியாவினை கொண்டாடும் விதமாக, மிஸ் இந்தியா 2024 போட்டி பிரம்மாண்டமான அளவில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பெமினா மிஸ் இந்தியா 2024 இறுதிப் போட்டி நடைபெற்றது.  இந்த இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் என்பவர், மிஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார்.

மிஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற நிகிதா போர்வாலுக்கு  கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தினி குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் கிரீடம் அணிவித்து கவுரவித்தனர். மேலும், இந்த ஆண்டில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியைச் சேர்ந்த ரேகா பாண்டே 2-வது இடத்தையும், குஜராத்தைச் சேர்ந்த ஆயுஷி தோலாக்கியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nikita porwal won the title of miss india 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->